மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்று வந்தது. தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 350 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 89 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
தமிழகத்தில் திமுக கூட்டணி 36 இடங்களிலும், அதிமுக கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் திமுக 14 இடங்களிலும், அதிமுக 8 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக குறிப்பிடப்படும்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலரும் எதிர்பார்த்தனர். தொகுதிகளை வெற்றி பெறாவிட்டாலும் திமுக, அதிமுகவுக்கு சில இடங்களில் போட்டியாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் 10 சதவீதம் வாக்குகளைப் பெறும் என்றும் கூறப்பட்டது.
ஆனால், வாக்கு எண்ணிக்கையில் அமமுக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. திமுக, அதிமுக இடையே மட்டும்தான் கடும் போட்டி நிலவுகிறது. இந்தப் போட்டியில் மூன்றாவது தரப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. திமுக அதிக பல இடங்களில் ஒரு லட்சம் வாக்குகளை பெற்றிருக்கையில், அமமுக 10 ஆயிரம் வாக்குகள் என்ற அளவிலேயே பெற்றுள்ளன. சிவகங்கை, தேனி உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் 30 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளனர்.
நிறைய இடங்களில், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உடன் அமமுக போட்டி போட்டு வருகின்றன. கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் 4வது இடத்திற்கும், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் 5வது இடத்திற்கும் அமமுக தள்ளப்பட்டுள்ளது. கடலூரில் திமுக வேட்பாளர் 1,42,850 வாக்குகளும், பாமக வேட்பாளர் 99,561 வாக்குகளும் பெற அமமுக வேட்பாளர் வெறும் 13,754 வாக்குகள் மட்டுமே பெற்றார். நாம் தமிழர் கட்சி 7,383, மக்கள் நீதி மய்யம் 3,526 வாக்குகளும் பெற்றன.
22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் கூட அமமுக வேட்பாளர் பெரிய அளவில் வாக்குகளைப் பெறவில்லை. திமுக, அதிமுக இடையே மட்டும்தான் போட்டி. திமுக, அதிமுக உடன் ஒரு இடத்தில்கூட போட்டியில்லை.
Loading More post
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
”சீட் குறைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் தவறுதான் காரணம்” - ப.சிதம்பரம்
இறுதியாகும் பேச்சுவார்த்தை... ஐபிஎல் அட்டவணை வெளியீடு... இன்னும் சில முக்கியச் செய்திகள்
பாஜக போட்டியிடும் தொகுதிகள் எவை? - அதிமுகவுடன் பேச்சுவார்த்தை
சூடு பறக்கும் தமிழக தேர்தல் களம்: இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள கூட்டணி பேச்சுவார்த்தை!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!