தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஒப்புகைச்சீட்டுகளுடன் வாக்குப்பதிவை ஒப்பிடவேண்டியுள்ளதால் மக்களவைத் தேர்தல் முடிவுகள், வழக்கத்தை விட தாமதமாக வெளியாகும் எனக் கூறப்படுகிறது.


Advertisement

நாடு முழுவதும் 54‌2 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து கடந்த 19ஆம் தேதி நிறைவடைந்தது. இதில்‌ 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கான வாக்கு எண்ணிக்கை காலை எட்டு மணிக்கு தொடங்குகின்றன. முதல்கட்டமாக தபால் வாக்குக்கள் எண்ணப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து மின்னணு இயந்திரங்களில் வாக்குகள் முழுவதும் எண்ணப்பட்ட பிறகு, ஒப்புகைச்சீட்டு இயந்திரமான விவிபேட் பதிவுச் சீட்டுகள் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஐந்து விவிபேட் இயந்திரங்கள் எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் வழக்கமாக வாக்கு எண்ணிக்கை நாளில் மாலைக்குள் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், இம்முறை தேர்தல் முடிவுகள் ஐந்து முதல் ஆறு மணிநேரம் தாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ளன.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement