உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆகியோர் இன்று வாக்களித்தனர்.
17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் 59 மக்களவைத் தொகுதிகளில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பீகாரில் 8, ஜார்கண்டில் 3, பஞ்சாப்பில் 13, மேற்கு வங்காளத்தில் 9, இமாசலபிரதேசத்தில் 4, மத்திய பிரதேசத்தில் 8, உத்தரபிரதேசத்தில் 13, சண்டிகரில் ஒன்று என 59 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடக்கிறது.இன்றைய தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், சத்ருஹன் சின்ஹா, மனோஜ் சின்ஹா, ஆர். பி சிங் உள்ளிட்டோர் போட்டி யிடும் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் காலையிலேயே வந்து வாக்களித்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் இன்று வாக்களித்தார்.
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், பாட்னாவில் உள்ள ராஜ்பவன் பள்ளியில் அமைக்கப் பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?