உலகக் கோப்பை இந்திய அணி : ‘ட்ரீம் லெவனில்’ யார் யார் ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்கப்போகும் 11 பேர் யார் என கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Advertisement

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் மே 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணி உட்பட அனைத்து அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. இந்திய அணியில் ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராட் கோலி, கேதர் ஜாதவ், விஜய் ஷங்கர், தோனி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், யஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமத் ஷமி, புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement

ஆனால் இந்த 15 பேரும் போட்டியில் விளையாட முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். இதில் யாரோ 11 பேர் தான் அணியில் விளையாடுவார்கள். அணியிலிருக்கும் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் மற்றவர்கள் விளையாட வாய்ப்புள்ளது. அந்த வகையில் 11 பேரில் யார் யார் இடம்பிடிப்பார்கள் ? என்பதை பார்க்கலாம்.

இந்திய அணியின் பலம் என்றால் தொடக்க ஆட்டக்காரர்கள் தான் என்று கூறலாம். அதனால் நீண்ட காலமாக இந்தியாவின் பலமாக இருக்கும் ரோகித் ஷர்மா மற்றும் தவான் ஆகியோர் கட்டாயம் இடம் பிடிப்பார்கள். அதைத்தொடர்ந்து கேப்டன் கோலி மற்றும் கீப்பர் தோனி கட்டாயம் அணியில் இருப்பார்கள். 


Advertisement

இதைத்தொடர்ந்து பவுலர்களை பொறுத்தவரையில் வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, புவனேஷ்வர் குமார் மற்றும் ஷமி அணியில் இருப்பார்கள். இதுவரை 7 ஆகிவிட்டது. இவர்கள் தவிர, ஸ்பின் பவுலர் குல்தீப் யாதவ் மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் கட்டாயம் அணியில் விளையாடுவார்கள். இவர்களுடன் சேர்த்து 9 பேர் ஆகிவிட்டனர். தற்போது மீதமுள்ள அந்த இரண்டு பேர் யார் என்பதுதான் அனைவரது கேள்வி. 

இந்த இரண்டு இடத்திற்கு போட்டி ஆட்களாக விஜய் ஷங்கர், கேதர் ஜாதவ், யஸ்வேந்திர சாஹல், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் உள்ளனர். இவர்களில் அதிக வாய்ப்பு இருக்கும் நபராக இருப்பவர் கேதர் ஜாதவ். இவர் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும், விளையாடியுள்ள சில சர்வதேச போட்டிகளில் தனது திறமையை சரியாக வெளிப்படுத்தியுள்ளார். 

குறிப்பாக விக்கெட்டுகளை இந்தியா இழந்து தடுமாறிய போது, நிலைத்து ஆடும் தன்மை கொண்டவராக இருக்கிறார். எனவே இவருக்கு இடமிருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இவருக்கு அடுத்த படியாக சாஹலுக்கு வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் அணியில் குல்தீப் யாதவின் பந்து எடுபடாத போட்டிகளில் மாற்று ஸ்பின்னராக சாஹலுக்கு விக்கெட் விழும். அதனால் அவரும் அணியில் இடம்பெறுவார். 

இதில் கேதர் ஜாதவ் சரியாக விளையாட தவறினால் அவருக்கு பதிலாக விஜய் ஷங்கரும், சாஹல் சொதப்பினால் அவருக்கு பதிலாக ஜடேஜாவிற்கும் வாய்ப்பு சென்றுவிடும். அதேசமயம் இந்திய பேட்ஸ்மேன்களில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் ராகுல் அணிக்குள் வருவார். இதில் தனித்துவிடப்பட்டிருப்பவர் தினேஷ் கார்த்திக் மட்டும்தான். ஏனென்றால் கீப்பர் தோனிக்கு காயம் ஏற்பட்டால் மட்டுமே அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும். 

loading...

Advertisement

Advertisement

Advertisement