Advertisement

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து‌ள்ளது.


Advertisement

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்றும், 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

சனிக்கிழமை வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அதேநேரத்தில் சில இடங்களில் வெயிலின் தாக்கம் தொடரும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையைப் பொருத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்தில் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழகத்தில் நேற்று 11 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. திருத்தணியில் அதிகபட்சமாக 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அதேநேரத்தில், சேலம், ஈரோடு, வேலூர், திண்டுக்கல், ராசிபுரம், தருமபுரி, போச்சம்பள்ளி ஆகிய இடங்களில் மழை பெய்தது. ஆரணி அருகே இடி மின்னல் சூறாவளி காற்றுடன் பெய்ந்த கன மழையினால் நெடுஞ்சாலையில் புளிய மரம் விழந்ததில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

loading...
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement