அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் இதுவரை உலக அளவில் 13ஆயிரம் கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது
இந்தியாவில் வெளிவந்துள்ள ஹாலிவுட் திரைப்படங்களில் பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருந்த திரைப்படம் என்றால் அது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் சமூக வலைத்தளங்கள் மற்றும் மீம்ஸ்களில் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ பெரும் முக்கியத்துவத்தை பெற்ற படமாக ட்ரெண்ட் ஆனாதால், அதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து தியேட்டர்களில் கூட்டம் கூடியது.
இது கோடை விடுமுறை என்பதால் குழந்தைகளுடன் குடும்பாக செல்லும் அனைவரும் இந்தப் படத்திற்கு சென்றுவிட்டனர். எனவே படத்தின் வசூல் வேகமாக உயர்ந்துவிட்டது. இதனால் உலக அளவில் இந்தப் படம் வெளியான சில நாட்களிலேயே ரூ.13ஆயிரம் கோடிகளை அள்ளிவிட்டது. மேலும் நாளுக்கு நாள் வசூல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்தியாவில் மட்டும் ரூ.300 கோடியை வசூல் செய்துள்ளது. இதுவரை இந்தியாவில் வெளியான ஹாலிவுட் திரைப்படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ பெற்றுள்ளது. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் சுமார் ரூ.2500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது எனக் கூறப்படும் நிலையில் தற்போது அதனை விட பல மடங்கு அதிகமாக வசூலை ஈட்டி மேலும் முன்னேறி செல்கிறது.
Loading More post
நிரவ் மோடியை இந்தியா அழைத்துவர இங்கிலாந்து உள்துறை அமைச்சர் அனுமதி
தீபக் சாஹர் அசத்தல் பவுலிங்! சென்னையின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு?
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்