[X] Close >

மார்ஷ் மல்லுக்கட்டியும் முடியல: சுருண்டது பஞ்சாப்

Punjab-to-notch-first-away-win-of-IPL-2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி நேற்று போராடித் தோற்றது.


Advertisement

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த போட்டியில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் மேக்ஸ்வெல், முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி ஆரம்பம் முதலே அடித்து ஆடத் தொடங்கியது. வார்னரும், தவானும், பஞ்சாப் பந்து வீச்சை பதம் பார்த்ததால் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் பறந்தது.

ஸ்கோர் 107 ரன்களாக இருந்தபோது, மேக்ஸ்வெல்லின் பந்தில் கிளீன் போல்ட் ஆனார் வார்னர். அவர் 51 ரன்கள் (27 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். தவான் 77 ரன்கள் (48 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), யுவராஜ்சிங் 15 ரன்களில் ஆட்டம் இழந்தனர். வில்லியம்சன் 27 பந்துகளில் 54 ரன் விளாச, 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது.


Advertisement

இதையடுத்து ஆடிய பஞ்சாப் அணியும் ரன் குவிக்க வேகம் காட்டியது. அதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, ஷான் மார்ஷ் மட்டும் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் மார்ஷ் ஆட்டத்தால் பஞ்சாப் வெற்றிபெற்றுவிடும் என்ற நிலையே இருந்தது. ஆனால், அவர் விக்கெட்டை புவனேஷ்வர்குமார் பதம் பார்க்க, பஞ்சாப் கனவு தகர்ந்தது. மார்ஷ், 84 ரன் (50 பந்து, 14 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.

20 ஓவர்களில் பஞ்சாப் 9 விக்கெட்டுக்கு 181 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ஐதராபாத் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹைதராபாத் தரப்பில் நெஹரா, சித்தார்த் கவுல் தலா 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close