குழந்தைகள் விற்பனை விவகாரம்: ராசிபுரம், கொல்லிமலையில் பிறப்புச் சான்றிதழ்கள் ஆய்வு

child-trafficking-issue--Officials-investigate-birth-certificates

குழந்தைகள் முறைகேடாக விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில், ராசிபுரம், கொல்லிமலை பகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் வழங்கப் பட்ட சுமார் 4,500 பிறப்புச் சான்றிதழ்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. 


Advertisement

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த செவிலியர் அமுதா, குழந்தைகளை விற்பனை செய்து வருவது தொடர்பான ஆடியோ வெளியானது. இதுதொடர்பான புகாரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, ராசிபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன், ராசிபுரம் காவல் ஆய்வாளர் செல்லமுத்து உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், அமுதாவிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது சேலத்தில் இருந்து ஒரு குழந்தையையும், கொல்லிமலையில் இருந்து 2 குழந்தைகளையும் விலைக்கு வாங்கி விற்பனை செய்ததாக, அமுதா வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதில், ஒரு குழந்தையை ஓசூர் பகுதியில் தம்பதியருக்கு விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது. தொடர் விசாரணையை அடுத்து செவிலியர் அமுதாவை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், குழந்தையை கடத்த உதவியாக இருந்ததாக அவரது கணவர் ரவிச்சந்திரனும் கைது செய்யப்பட்டார். 


Advertisement

குழந்தைகளின் அழகான தோற்றம், கலர் ஆகியவற்றை வைத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படு வதாக தெரிகிறது. ஆண் குழந்தைகளை 4 லட்ச ரூபாய்க்கும், பெண் குழந்தைகளை 3 லட்ச ரூபாய்க்கும் விற்றுள்ளனர். விற்பனை செய்யப்படும் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழும் வாங்கிக் கொடுத்துள்ளனர்.  அதற்கு ரூ.70 ஆயிரம் ஆகும் என்று நர்ஸ் அமுதா தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, ராசிபுரம், கொல்லிமலை பகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் வழங்கப்பட்ட சுமார் 4,500 பிறப்புச் சான்றிதழ்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. மருத்துவமனை மற்றும் வீட்டில் பிறந்த குழதைகளின் பிறப்புச் சான்றிதழ் குறித்த உண்மை தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement