தங்க மங்கை கோமதிக்கு ஸ்டாலின், தினகரன் வாழ்த்து

MK-Stalin--TTV-Dhinakaran-wishes-Asian-Athletics-Gomathi

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 


Advertisement

800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை கோமதி பெற்றுத் தந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தனது ட்விட்டரில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் உலக அரங்கில் பெருமை தேடித் தந்திருக்கும் கோமதி மேலும் பல அரிய சாதனைகளை நிகழ்த்திட வாழ்த்துவதாகவும் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

              


Advertisement

ஏழை விவசாயியின் மகள் சாதனை புரிந்திருப்பது மனதை நெகிழ வைத்திருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கும் வீராங்கனை கோமதி மேலும் பல உயரங்களை எட்டிப்பிடிக்க வேண்டும் எனவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

                         

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement