பாலியல் புகார் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பணியாளர் சங்கம் ஆதரவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் கூறப்பட்டுள்ள நிலையில், அவருக்கு உச்ச நீதிமன்ற பணியாளர்கள் நல சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.


Advertisement

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் ரஞ்சன் கோகாய். இவர் மீது உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய 35 வயது பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்துள்ளார். அதில் கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவரது வீட்டில் வைத்து தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் பேசியுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அடுத்த வாரத்தில் சில முக்கிய வழக்குகளை கையாள இருப்பதாகவும், அதனை தடுக்கும் முயற்சியாக இந்த புகாரை பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தார். அத்துடன் நீதித்துறை கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது எனவும் இதேநிலை தொடர்ந்தால் நேர்மையானவர்கள் நீதித்துறைக்கு வேலைக்கு வருவதற்கு தயங்குவார்கள் எனவும் கூறியிருந்தார்.


Advertisement

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பணியாளர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து கண்டன அறிக்கை ஒன்றை அச்சங்கம் வெளியிட்டுள்ளது. அதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் பொய்யானது என்றும் ஜோடிக்கப்பட்டது என்றும் எவ்வித அடிப்படையும் இல்லாதது என்றும் கூறப்பட்டுள்ளது. 

உச்ச நீதிமன்றம் என்ற மாண்பு மிக்க அமைப்பை சீர்குலைப்பதற்கென்றே இது போன்று புகார்கள் கூறப்படுவதாகவும் அச்சங்கம் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில் ‌இவ்விவகாரத்தில் நீதிபதி ‌ரஞ்சன் கோகாய் உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றவில்லை என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement