ராகுல் கேட்டுக்கொண்டால் வாரணாசியில் போட்டி - பிரியங்கா காந்தி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டால் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட தயாராக இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.


Advertisement

பிரதமர் மோடி போட்டியிடுவதால் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதி, இந்தப் பொதுத் தேர்தலில் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இங்கு அடுத்த மாதம் 19ம் தேதி இறுதிக்கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில் இ‌த்தொகுதிக்கான வேட்பாளரை காங்கிரஸ் கட்சி இன்னும் அறிவிக்கவில்லை.


Advertisement

இந்நிலையில் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பிரியங்கா போட்டியிடவிருப்பதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து, கேரளாவின் வயநாடு தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட பிரியங்கா காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், காங்கிரஸ் தலைவர் தம்மை போட்டியிடச் சொன்னால் தாம் போட்டியிட தயாராக இருப்பதாக கூறினார். பாரதிய ஜனதா கட்சியின் உமாபாரதி தம்மைப் பற்றி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா காந்தி, தனது குடும்பத்தினர் குறித்து பாஜகவினர் ஏதாவது குறைசொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள் என்றும், ஆனால் தங்களுடைய பணியை தாங்கள் செய்துகொண்டே இருப்போம் எனவும் தெரிவித்தார்.

முன்னதாக மோடியை எதிர்த்து பிரியங்கா நிறுத்தப்படுவாரா என்‌ற கேள்விக்கு‌ பதில் அளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இதற்கு ஆம் என்றோ அல்லது இல்லை என்றோ பதில் அளிக்கப் போவதில்லை என்றும் இதை சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்கவே விரும்புகிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement