திருச்சியில் உயிரிழந்த 7 பேர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருச்சி கோயில் திருவிழாவில் உயிரிழந்த 7 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதியை முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.


Advertisement

திருச்சி முத்தம்பாளையம் திருவிழாவில் 7 பேர் உயிரிழந்ததை அறிந்து மனவேதனை அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் கூறியுள்ளார். அத்துடன் உயிரிழந்த 7 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும்,. காயமடைந்த 12 பேருக்கு ரூ.50 ஆயிரம் நிதியாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து இந்த தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, திருச்சி மாவட்டம் முத்தையம்பாளையத்தில் உள்ள வண்டிதுரை கருப்பசாமி கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு விழா நடைபெற்றது. முதல் இரண்டு நாள்கள் குறி சொல்லப்பட்டது. 3ஆம் நாளான இன்று பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வந்திருந்தனர். 


Advertisement

அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கந்தாயி, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வள்ளி, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தி, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பூங்காவனம், ராசவேல், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமர், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமிகாந்தன் ஆகியோர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கோயிலை நிர்வகித்து வந்த தனபால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement