இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் நடிகை ராதிகா சரத்குமார் நூலிழையில் உயிர்தப்பியுள்ளார்.
ஈஸ்டர் தினமான இன்று இலங்கையில் நான்கு தேவாலயங்களில் ஒரே நேரத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. கொச்சிக் கடை தேவாலயம், கட்டுவப்பிட்டிய தேவாலயம், கிங்ஸ்பெரி தேவாலயம், பட்டிகலோயாவில் உள்ள தேவாலயம் ஆகிய இடங்களில் சக்தி வாய்ந்த குண்டுவெடித்தது. இதில், பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவ ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுதவிர ஷாங்ரி லா, சின்னமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்தில் 102 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொடர் குண்டுவெடிப்பு அங்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக நடிகை ராதிகா உயிர் தப்பியுள்ளார். இதை அவரே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
‘’சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் இருந்து வெளியேறிய சில நிமிடங்களில் அங்கு குண்டு வெடித்தது, அதிர்ச்சியளிக்கிறது. இந்த அதிர்ச்சி சம்பவத்தை நம்ப முடியவில்லை. கடவுள் நம்மோடு இருக்கிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: திமுக மீது மார்க்சிஸ்ட் அதிருப்தி?
தங்கம் சவரனுக்கு ரூ.608 குறைவு
தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி... தேமுதிகவிற்கு அதிமுக மீண்டும் அழைப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?