''நியாய் திட்டம், இந்திய பொருளாதாரத்துக்கான பெட்ரோல்'' : ராகுல் காந்தி பெருமிதம் 

NYAY-scheme-will-be--petrol--for-India-s-economy--Rahul-Gandhi

ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கும் நியாய் திட்டம், இந்திய பொருளாதாரத்துக்கான பெட்ரோல் போன்றது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெருமிதம் தெரிவித்துள்ளார்.


Advertisement

மக்களவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள வாக்குறுதியில் ஏழை, எளிய மக்களுக்கு மாதம் ஆறாயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 'நியாய்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும், தங்கள் பரப்புரையில் குறிப்பிட்டுப் பேசி‌ வருகின்றனர். 

Image result for நியாய் திட்டம்


Advertisement

இந்நிலையில் சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் தேர்தல் பரப்புரையின்போது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் அறிவித்துள்ள நியாய் திட்டம், வறுமை மீது தொடுக்கப்படும் சர்ஜிக்கல் ஸ்டிரைக். அதாவது துல்லியத் தாக்குதல் போன்றது என்று குறிப்பிட்டார். மேலும்  என்ஜினை சுறுசுறுப்பாக இயக்கும் பெட்ரோல் போன்று தேங்கிக் கிடக்கும் இந்திய பொருளாதாரத்திற்கு நியாய் திட்டம் உதவும் என்றார்.

Image result for nyay scheme
கடந்த மக்களவைத் தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசிய பிரதமர் மோடி, அதில் எதையும் நிறைவேற்றவில்லை எனச் சாடிய ராகுல், பார‌திய ஜனதாவின் பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு நடவடிக்கைகளால், 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் நாட்டில் வேலையின்மை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement