பாகிஸ்தானுடனான வர்த்தகத்துக்கு தடை - மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காஷ்மீர் மாநிலத்தில், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தானுடன் நடைபெறும் வர்த்தகத்தை தடைசெய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

காஷ்மீரில் புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவு பாதிக்கப்பட்டது. எனினும், காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே, இரு நாட்டு மக்களின் அத்தியாவசிய பொருட்களுக்கான வர்த்தகம் நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எல்லைக்கட்டுப்பாட்டு கோடு வர்த்தகம் தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள், சட்டவிரோதமாக ஆயுதங்களையும், போதைப் பொருட்களையும், போலி கள்ள ரூபாய் நோட்டுகளையும் கடத்துவதாக தகவல் வந்துள்ளதால், தடைவிதிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement