திருவள்ளூர் அரிசி ஆராய்ச்சி நிலைய குரூப் டி ஊழியரை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்த உத்தரவை எதிர்த்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திரூர் அரிசி ஆராய்ச்சி நிலையத்தில் அலுவலக உதவியாளராக 30 ஆண்டுகளாக பணிபுரியும் சந்திரசேகரனை, புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் உறுப்பு கல்லூரிக்கு இடமாற்றம் செய்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. குரூப் டி ஊழியரான தன்னை இடமாற்றம் செய்வது சட்டவிரோதமானது என்றும், பேராசிரியர் அகிலா என்பவரின் தூண்டுதலின் பேரிலேயே தன்னை இடமாற்றம் செய்ய பல்கலைக்கழகம் முடிவு எடுத்துள்ளதாகவும், அந்த இடமாற்றத்தை ரத்து செய்யக் கோரியும் சந்திரசேகரன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது, பல்கலைக்கழகத்தின் புதிய உறுப்பு கல்லூரி புதுக்கோட்டையில் தொடங்கப்பட்டுள்ளதால், அங்கு அனுபவம் வாய்ந்தவரும் தேவைப்படும் என்ற நிர்வாக காரணத்திற்காகத்தான் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், வேறு யாருடைய தூண்டுதலின் பெயரிலியோ இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என வேளாண் பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இடமாற்ற உத்தரவை எதிர்த்து சந்திரசேகர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் குரூப் டி ஊழியர்கள் வருமானம் குறைவு என்ற காரணத்தினாலேயே அவர்கள் இடமாற்றம் செய்யப்படுவதில்லை. இருப்பினும் நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் செய்தால், அதை ஏற்று கொள்ள வேண்டும் எனவும் நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.
Loading More post
வன்முறையுடன் எங்களுக்கு தொடர்பில்லை - விவசாயிகள்
டெல்லி போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு
டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் புகைப்படத் தொகுப்பு
பதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு!
கதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி