[X] Close >

டிடிவி-க்கு 5 நாட்கள் போலீஸ் காவல்

5-days-police-custody-to-ttv-dhinakaran

டிடிவி தினகரனை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


Advertisement

இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் டிடிவி.தினகரன் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். நேற்று நான்காவது நாளாக அவரிடம் விசாரணை நடந்தது. இதனைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார். அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவையும் டெல்லி போலீஸ் கைது செய்தது.

இந்நிலையில் டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் டிடிவி தினகரன், மல்லிகார்ஜூனா இன்று பிற்பகலில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இருவரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி டெல்லி போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதனிடையே, ஜாமீன் கோரி டிடிவி தினகரன் தரப்பில் அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்திருந்தார். விசாரணைக்கு சம்மன் அனுப்பியதிலிருந்தே, எந்தவித இடையூறும் இல்லாமல் நேரடியாக விசாரணைக்கு டிடிவி தினகரன் ஆஜராகி முழு ஒத்துழைப்பு கொடுத்ததால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


Advertisement

இந்நிலையில் டிடிவி தினகரனை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. டிடிவி தினகரனை சென்னை, பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கவும் டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close