ஜனநாயக கடமை ஆற்றிய உலகின் குள்ளமான பெண்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற முதல் கட்ட மக்களவைத் தேர்தலில் உலகிலேயே மிக உயரம் குறைந்த பெண்ணான ஜோதி ஆம்கே வாக்களித்தார். 


Advertisement

இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று துவங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு
தொடங்கியதிலிருந்து ஏராளமான வாக்காளர்கள், வாக்குச்சாவடி முன் வரிசையாக நின்று தங்களது ஜனநாயக கடமையாற்றினர். மிக முக்கியமாக முதல்முறை வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து, தங்களது விரலை செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


Advertisement

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற முதல் கட்ட மக்களவைத் தேர்தலில் உலகிலேயே மிக உயரம் குறைந்த பெண்ணான ஜோதி ஆம்கே வாக்களித்தார். நாக்பூரிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். இரண்டு அடி ஒரு அங்குலம் மட்டுமே உயரம் கொண்ட ஜோதி ஆம்கேவுக்கு வயது 25 ஆகும். 

ஜோதி ஆம்கே, அனைவரும் ‌‌வாக்களிக்க வேண்டும் என்றும் ஜனநாய‌கத்தின் முதல் கடமையை ஆற்றிவிட்டு அடுத்த வேலையை தொடங்குங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.

வாக்களித்தபின் பேசிய ஜோதி ஆம்கே, “நான் எல்லோருக்கும் இந்தத் தகவலை தெரிவிக்கணும். எல்லோரும் சேர்ந்து வாக்களித்தால் தான் நல்ல அரசை தேர்தெடுக்க வேண்டும். நல்ல அரசை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் நாம் அனைவரும் வாக்களிக்க வேண்டும். பல்வேறு வேலைகளுக்கிடையே வாக்களிப்பது நமது கடமையாகும். அனைவரும் தவறாமல் வாக்களிப்போம்” எனத் தெரிவித்தார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement