மோடிக்கு தமிழகம் அல்லது கேரளாவில் போட்டியிட தைரியம் இருக்கிறதா? - சசி தரூர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழகம் அல்லது கேரளாவில் போடியிட தைரியம் இருக்கிறதா? என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.  


Advertisement

உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில்தான் கடந்த 2004ஆம் ஆண்டு தேர்தலில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். கடந்த தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து ஸ்மிருதி ராணி போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில், வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் ஸ்மிருதி ராணி ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடுகிறார்.

இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி தென் மாநிலங்களில் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து கேரளாவின் வயநாடு  நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளார் ராகுல் காந்தி. 


Advertisement

இந்நிலையில், ராகுல் காந்தியை போல தமிழகம் மற்றும் கேரளாவில் போட்டியிடும் தைரியம் பிரதமர் மோடிக்கு இருக்கிறதா என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார். 

தென்னிந்தியாவில் போட்டியிடும் தலைவர் பிரதமராக வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பும் மக்கள் மத்தியில் உள்ளது என குறிப்பிட்ட அவர், கேரளாவில் போட்டியிடும் தைரியம் ராகுலுக்கு உள்ளது எனவும், இதன் மூலம் அவரால் வட இந்தியாவிலும், தென்னிந்தியாவில் வெற்றிப்பெற முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார். 


Advertisement

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாதுகாப்பான தொகுதியை நோக்கி ஓடுகிறார் என பாஜக விமர்சனம் செய்வதாகவும், பிரதமர் மோடிக்கு தமிழகம் மற்றும் கேரளாவில் போட்டியிட தைரியம் இருக்கிறதா என்ற கேள்விக்கு பாஜகவினர் முதலில் பதில் சொல்லட்டும் எனத் தெரிவித்தார்.

பாஜக ஆட்சிக்காலத்தில் தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டதாகவும், எனவே நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் பாலமாக விளங்க வேண்டும் என்பதற்காகவே வயநாடு தொகுதியை ராகுல் காந்தி தேர்வு செய்துள்ளதாகவும் சசிதரூர் குறிப்பிட்டார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement