“பணத்தை நம்பி திமுக போட்டிபோடுவது அம்பலமாகிவிட்டது” - ஹெச்.ராஜா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திமுக கூட்டணி பணத்தை நம்பி தான் தேர்தலில் களம் இறங்கியுள்ளது என அம்பலமாகிவிட்டதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.


Advertisement

பாஜகவின் சார்பில் அறிவிக்கப்பட்டு சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஹெச்.ராஜா புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “துரைமுருகனின் உதவியாளர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் பணம் கைப்பற்றியிருப்பது, திமுக கூட்டணி பண பலத்தை நம்பி தான் தேர்தலில் போட்டியிடுகிறது என்பதை அம்பலமாக்கியுள்ளது.

பண பலத்தை நம்பி தேர்தலில் போட்டியிடுவதை மக்களிடம் ஒப்புக்கொண்டு திமுக தலைமை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். கார்த்தி சிதம்பரமும், ப.சிதம்பரமும் அமலாக்கத்துறை சிபிஐ உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை சந்தித்து பிரபலமடைந்தவர்கள். அதேபோல் நான் பிரபலம் அடையாத காரணத்தால், கார்த்தி சிதம்பரத்திற்கு நான் யார் என்று தெரியவில்லை. ஆனால் கடந்த தேர்தல்களில் ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை விட நான் அதிக வாக்குகள் வாங்கியவன்” என்று கூறினார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement