ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதற்கு நல்ல பலன் கிடைத்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் அம்பத்தி ராயுடு ஒரு ரன்னிலும் ஷேன் வாட்சன் 13 ரன்னிலும், அடுத்து வந்த கேதர் ஜாதவ் 8 ரன்னிலும் நடையை கட்டினர். 27 ரன்னில் 3 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி, தடுமாறிக் கொண்டிருந்தபோது சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.
இருவரும் முதலில் மெதுவாக ஆடி, பின்னர் விளாசத் தொடங்கினர். சுரேஷ் ரெய்னா 36 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பிராவோ, அதிரடியை வெளிப்படுத்தினார். இதற்கிடையே தோனி அரை சதம் அடித்து அரங்கத்தை அதிரச் செய்தார்.
பின், 16 பந்தில் பிராவோ 27 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஜடேஜா, வந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் இறுதிவரை அவுட் ஆகாமல் ஆடிய தோனி, 46 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியில் ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியிலும் தொடக்க விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. கேப்டன் ரஹானே ரன் ஏதும் எடுக்கமாலும் பட்லர் 6 ரன்னிலும் கடந்த போட்டியில் சதமடித்த சஞ்சு சாம்சன் 8 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேற, அந்த அணி 14 ரன்னில் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அடுத்து வந்த திரிபாதியும் ஸ்மித்தும் ஓரளவுக்கு தாக்குப் பிடித்து நின்றனர். ஆனால் இந்த ஜோடியை இரக்கமின்றி பிரித்தார் இம்ரான் தாஹிர்.
திரிபாதி 39 ரன்னிலும் ஸ்மித் 28 ரன்னிலும் ஆட்டமிழக்க, பென் ஸ்டோக்ஸ் மிரட்டத் தொடங்கினார். ஆனால், அவர் விக்கெட்டை பிராவோ சாய்க்க, ராஜஸ்தான் அணியின் தோல்வி உறுதியானது. ஸ்டோக்ஸ் 26 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 46 ரன் எடுத்தார். ஆர்ச்சர் 11 பந்தில் 24 எடுத்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் அந்த அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதையடுத்து 8 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர், பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தோனி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து மூன்று போட்டிகளில் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது.
Loading More post
தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தலா? - இன்று மாலை தேதி அறிவிப்பு
விவசாயிகள், ஏழைகளின் நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு
தேசியகுழு உறுப்பினர் முதல் மாநில செயலாளர் வரை... தா.பாண்டியனின் அரசியல் பயணம்
”அடித்தட்டு மக்களுக்காகவே வாழ்ந்தவர்” - தா.பாண்டியன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்
இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கும் தலைமை தேர்தல் ஆணையர்- தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!