''உடல் சூட்டை குறைப்பது மட்டுமில்லாமல் ஹார்மோன்ஸ் சுரப்பதற்கும் எண்ணெய் குளியல் பெரிய அளவில் உதவியாக இருக்கின்றது''
Advertisement
காற்றின் ஈரப்பதம் குறைந்துள்ளதால் குமரி முதல் வட கர்நாடகம் வரை உள்ள பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளதாக சென்னை வானிலை மையம் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தது. அதன்படியே வெயில் தன்னுடைய உக்கிரத்தை காட்டி வருகிறது. மார்ச் மாதத்திலேயே கத்தரி வெயிலை போல வெப்பம் நிலவுகிறது. கிராமங்கள் நகரங்கள் என பாகுபாடின்றி அனைவரையும் வெயில் வாட்டி வதைக்கிறது. ஆங்காங்கே பழச்சாறு கடைகள் முளைத்திருக்கின்றன. பொதுமக்களும் சூட்டை தணிக்க என்னென்னவோ செய்து வருகிறார்கள். இந்த நேரத்தில் நாம் முக்கிய கடைபிடிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது. அது 'எண்ணெய் குளியல்'.
ஆத்திச்ச்சூடியில் அவ்வையார் கூறியுள்ள 'சனி நீராடு' என்பதற்கு பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும் ''சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்'' என்பதே பொதுவான பொருளாக கொள்ளப்படுகிறது. தற்போது தீபாவளிக்கு மட்டுமே எண்ணெய் குளியல் என்று சுருங்கிவிட்டது. ஆனால் எண்ணெய் குளியல் என்பது மிகவும் முக்கியமான மருத்துவ முறை என்று இயற்கை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் சாதாரணமாக தண்ணீர் ஊற்றி குளிப்பது போல எண்ணெய் குளியல் என்பது சாதாரண குளியல் இல்லை என்றும், அது ஒரு மருத்துவம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி மருத்துவமாக பார்க்கப்படும் எண்ணெய் குளியலில் என்னதான் இருக்கிறது. பார்ப்போம்.
பொதுவாக உடல் கோளாறுகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது 'உடல் சூடு'. அப்படிபட்ட உடல் சூட்டுக்கு எதிரியாக இருக்கிறது எண்ணெய் குளியல். உடல் சூட்டை குறைப்பது மட்டுமில்லாமல் ஹார்மோன்ஸ் சுரப்பதற்கும் எண்ணெய் குளியல் பெரிய அளவில் உதவியாக இருக்கின்றது. உடல் ஆரோக்யத்துக்கான ஹார்மோன்ஸ் சுரப்பதால் நம் மனநிலை புத்துணர்ச்சியாக இருக்கிறது.
தூக்கத்துக்கான ஹார்மோன்ஸ் சுரப்பதால் இரவில் நன்றாக தூக்கம் வருகிறது. நல்ல தூக்கம் காரணமாக மன அழுத்தம் குறைகிறது. ரத்த சோகை வராமல் தடுத்து உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எண்ணெய் குளியல் உதவுகிறது. பெண்களுக்கு மாதவிடாயில் ஏற்படும் பிரச்னைக்கு எண்ணெய் குளியல் தீர்வாக அமைகிறது. எண்ணெய் குளியலன்று அதிக எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகள், அதீத குளிர்ச்சியான உணவுகளை எடுக்காமல் எளிதில் செறிமானம் ஆகக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ளுதல் நல்லது. ஐஸ்கிரீம் போன்ற குளிர்ச்சியான உணவுகளையும் தவிர்ப்பது நல்லது எனவும் இயற்கை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
வாரத்துக்கு இரண்டு நாட்கள் எண்ணெய் தேய்த்து குளித்தால் நல்லது என்றும் குறைந்தது ஒரு நாளாவது எண்ணெய் குளியல் அவசியம் என்றும்இயற்கை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கால நிலை, உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு எண்ணெய் குளியலை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் இயற்கை மருத்துவர்களை அணுகி தெளிவு பெறலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Loading More post
ஏப்ரல் 9ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடக்கம்?
திருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம்; தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்
நாகர்கோவிலில் இன்று அமித் ஷா பரப்புரை!
தொகுதி பங்கீட்டில் திமுக-காங்கிரஸ் இடையே சுமூக உடன்பாடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
அனல்பறக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்.. பிரதமர் மோடி இன்று பிரசாரம்.!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!