JUST IN

Advertisement

திமுக வேட்பாளர்கள் யார்? - தயாநிதிமாறன், ஆ.ராசா, கனிமொழி போட்டியிடுவது உறுதி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் நாளை மறுதினம் வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


Advertisement

தமிழகம், புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில், திமுக 20 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அதில், வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இந்நிலையில், அங்கு யார் யாரெல்லாம் போட்டியிட வாய்ப்புள்ளது என்பது குறித்து பார்க்கலாம். 


Advertisement

மத்திய சென்னை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் கனிமொழி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதற்கான களப்பணிகளில் அவர் இறங்கி விட்டதாக கூறப்படுகிறது. தென்சென்னையில் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் ஆ.ராசாவும் திருவண்ணாமலை தொகுதியில் அண்ணாதுரை என்பவரும் தேர்வு செய்யப்பட வாய்ப்‌பு உள்ளதாக தெரிகிறது. 

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் சேலத்தில் போட்டியிடலாம் எனவும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன் கடலூர் தொகுதியில் தேர்வு செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது. அரக்கோணத்தில் ஜெகத்ரட்சகன், தஞ்சையில் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், நெல்லையில் திரவியம் என்‌பவரும், தென்காசியில் துரை என்பவரும் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement