மார்ச் 21 ஆம் தேதி முதல் பசுமை பட்டாசு உற்பத்தியை தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுவதாக கூறி கடந்த 2015-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் இடைக்கால தீர்ப்பை கடந்த அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம் வழங்கியது. அதில், பட்டாசு வெடிப்பதற்கும் உற்பத்தி செய்வதற்கும் எவ்வித தடையும் இல்லை.
ஆனால் சரவெடி பட்டாசுகள் தயாரிக்கக்கூடாது, பேரியம் நைட்ரேட் மூலப்பொருட்களுடன் பட்டாசுகள் தயாரிக்கக்கூடாது, பசுமை பட்டாசு தயாரிக்க வேண்டும் போன்ற கடுமையான நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் விதித்தது. இதனிடையே பசுமை பட்டாசுகள் தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்கள் இல்லாத காரணத்தினால் பட்டாசு ஆலைகளை திறக்க முடியாத சூழல் சிவகாசியில் ஏற்பட்டது. பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் பல லட்சம் பட்டாசு தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மத்திய தொழில்துறை அமைச்சக அதிகாரிகளுடன் பட்டாசு உற்பத்தியாளர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், பட்டாசு உற்பத்தியாளர் வணிக கூட்டமைப்பு தலைவர் ராஜாசந்திரசேகரன் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மார்ச் 21 ஆம் தேதி முதல் பசுமை பட்டாசு உற்பத்தியை தொடங்கவும் மார்ச் 30 ஆம் தேதி முதல் முழுமையாக பட்டாசு உற்பத்தியை தொடங்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
Loading More post
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்