மக்களவை தேர்தலில் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடே மிகவும் எதிர்பார்த்திருக்கும் மக்களவை தேர்தலுக்கான தேதிகளை தலைமை தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவிக்க உள்ளது. டெல்லியில் மாலை 5 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில், தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படுகிறது. பிற்பகலில் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதனையடுத்து செய்தியாளர் சந்திப்பில் தேதிகள் அறிவிக்கப்படும்.
மக்களவை தேர்தல் அறிவிப்புடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2014 மக்களவை தேர்தல் 9 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 அல்லது 8 கட்டங்களாக நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்படலாம் என்றும், முதல் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
மொத்தமாக மக்களவை தேர்தலில் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 1.6 கோடி வாக்காளர்கள் 18 லிருந்து 19 வயதிற்கு உட்பட்டவர்கள். ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதிகளும் மக்களவை தேர்தலோடு அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும் என்பதால் அரசு புதிய அறிவிப்புகளை வெளியிட முடியாது.
Loading More post
நிரவ் மோடியை இந்தியா அழைத்துவர இங்கிலாந்து உள்துறை அமைச்சர் அனுமதி
தீபக் சாஹர் அசத்தல் பவுலிங்! சென்னையின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு?
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்