இயக்குனர் சசி, தனது அடுத்தப் படத்துக்கு ’சிவப்பு மஞ்சள் பச்சை’ என்று டைட்டில் வைத்துள்ளார்.
தமிழில், சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், டிஷ்யூம், பூ, ஐந்து ஐந்து ஐந்து, பிச்சைக்காரன் ஆகிய படங்களை இயக்கியவர் சசி. இவர் இப்போது சித்தார்த், ஜி.வி.பிரகாஷ்குமார் இணைந்து நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ’சிவப்பு மஞ்சள் பச்சை’ என்று டைட்டில் வைக்கப் பட்டுள்ளது.
இதை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி பிள்ளை தயாரிக்கிறார். இவர், வேதாளம், அரண்மனை, மாயா, பாகுபலி 1, காஞ்சனா, சிவலிங்கா உட்பட பல படங்களை விநியோகம் செய்தவர்.
அக்கா - தம்பி உறவை புதிய கோணத்தில் சொல்லும் படமான இதில், அக்காவாக மலையாள நடிகை லிஜோ மோள் நடிக்கிறார். அவர் ஜோடி யாக, சித்தார்த் நடிக்கிறார். இதில் அவருக்கு டிராபிக் இன்ஸ்பெக்டர் வேடம். லிஜோ மோளின் தம்பியாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார். பைக் ரேசராக வருகிறார். மற்றும் காஷ்மீரா, மதுசூதனன், நக்கலைட் யுடியூப் குழு நடிகர்கள் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சித்து குமார் இசை அமைக்கிறார்.
Loading More post
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி