கல்லூரியில் படமாக்கப்படும் விஜயின் கால்பந்தாட்ட காட்சிகள் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படத்தில் கால்பந்து தொடர்பான காட்சிகள் தனியார் கல்லூரியில் எடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


Advertisement

‘சர்கார்’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். அட்லி-விஜய் இருவரும் ஏற்கெனவே ‘தெறி’, ‘மெர்சல்’ உள்ளிட்ட இரண்டு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். இன்னும் பெயரிப்படாத விஜயின் 63வது திரைப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்தில் நயன்தாரா,கதிர், விவேக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.


Advertisement

இந்தத் திரைப்படத்தில் கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் கால்பந்து பயிற்சியிலும் ஈடுபட்டார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. இடையே இடைவெளி விடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தனியார் கல்லூரியில் நடைபெற்று வருவதாகவும், கால்பந்து விளையாட்டு தொடர்பான காட்சிகள் அங்கு எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. சில நடிகர்கள் தவிர பல உண்மையான கால்பந்து வீரர்களும் படத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Advertisement

இதற்கிடையே படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் விஜய் வெளிவரும் காட்சியும், காரில் செல்லும் காட்சியும் இணையத்தில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement