அதிமுக -பாஜக கூட்டணியின் பொதுக்கூட்டம்.. விளம்பரத்தில் விஜயகாந்த் படம் இல்லை..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது அம்மா’வில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் கூட்டணி தலைவர்களின் புகைப்படங்கள் அடங்கிய விளம்பரம் வெளியாகி உள்ளது. ஆனால் அதில் விஜயகாந்த் புகைப்படம் இடம்பெறவில்லை.


Advertisement

அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிகவை கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வந்தது. நேற்றைய தினமே தேமுதிக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை தேமுதிக தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. எனினும் தேமுதிக தங்கள் கூட்டணியில் இணையும் என பாஜக மற்றும் அதிமுகவை சேர்ந்த தலைவர்கள் கூறி வருகின்றனர்.


Advertisement

இந்த சூழலில் இன்று சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் அதிமுக - பாஜக கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி இதில் கலந்து கொண்டு பரப்புரையை தொடங்குகிறார். இந்த பொதுக்கூட்டத்துக்காக அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரங்களில், பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களின் படங்களும் இடம்பெற்றுள்ளன. ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் படம் இடம்பெறவில்லை. இதனால் அதிமுக- தேமுதிக கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement