மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்கியுள்ள படம், 'பூமராங்'. அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ’அர்ஜூன் ரெட்டி’ ரதன் இசையமைத்துள்ளார். வரும் 8ஆம் தேதி ரிலீஸ் ஆகும் இந்தப் படம் பற்றிய செய்தியாளர் கள் சந்திப்பு நேற்று நடந்தது.
படம் பற்றி இயக்குனர் கண்ணன் கூறும்போது, ’’ஒரு படம் நினைச்ச மாதிரி வரணும்னா அதற்கு ஹீரோ ஆதரவு நிச்சயம் தேவை. அதர்வா அந்த வகையில படத்தோட பெரிய தூணா இருந்தார். அடுத்த படத்திலும் நாங்கள் இணைகிறோம். எப்ரல் மாதம் ஷூட்டிங். ’இவன் தந்திரன்’ படத்துக் கு பிறகு இது எனக்கு முக்கியமான படம். அந்த படம் நல்லா ஓடினாலும், சில காரணங்களால எதிர்பார்த்த வசூல் கிடைக்கலை. ஒரு நல்ல படத் தை ரசிகர்கள் எப்பவும் கைவிட்டதில்லை. இந்த படத்தையும் வெற்றிப்படமா மாற்றுவாங்கன்னு நம்புறேன். இந்தப் படத்தை நல்ல தேதியில் வெளியிட எனக்கு ஆதரவா இருக்கும் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரனுக்கு நன்றி’’ என்றார்.
’’எல்லாம் இருந்தாதான் படம் எடுப்பேன்னு சொல்லாம இருப்பதை வச்சு படத்தை சிறப்பாக எடுப்பவர் இயக்குனர் கண்ணன். மோதலில்தான் காதல் உருவாகும் என்பது போல, எனக்கும் கண்ணன் சாருக்கும் உரசலில்தான் நட்பு ஆரம்பிச்சது. எனக்கு கதை எழுதுவதில் நம்பிக்கை வர முக்கிய காரணம் ’இவன் தந்திரன்’ படம் தான். நதிநீர் பிரச்னையை, நதிநீர் இணைப்பை பற்றி பேசும் முக்கியமான படமா இது இருக்கும்’’ என்று நடிகர் ஆர்ஜே பாலாஜி கூறினார்.
படத்தின் ஹீரோ அதர்வா கூறும்போது, ’’படத்தை எப்போ ஆரம்பிச்சு எப்போ முடிச்சோம்னு தெரியவே இல்லை. வேகமா முடிச்சுட்டோம். பூம ராங் என்றால் கர்மா. நாம் என்ன செய்தோமோ அது தான் நமக்கு திரும்ப வரும். இந்த படத்தில் பிரச்சார தொனி எதுவும் இருக்காது. அனை வரும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமா எடுத்திருக்கிறோம். இதுல நடிச்சிருக்கிற இந்துஜா, மேகா ஆகாஷ் இரண்டு பேருக்குமே பிரகாசமான எதிர்காலம் உண்டு. தமிழ் பேசும் நாயகிகள் தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் தேவை’’ என்றார்.
Loading More post
"கடந்த ஆண்டைபோல கொரோனாவை ஒழிப்போம்" - பிரதமர் மோடி
கொரோனா கட்டுப்பாடுகள்: முதலமைச்சர் இன்று ஆலோசனை!
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி