நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அங்கீகரிக்கப்படாத 27 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ளது. அதற்காக இந்திய முழுவதும் உள்ள கட்சிகள் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன. தேர்தல் ஆணையமும் அனைத்து கட்சி கூட்டங்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை ஆகியவற்றை செய்து வருகிறது.
பொதுவாக தேர்தல் நடப்பதற்கு முன்பு தேர்தல் ஆணையம் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்குவதை வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கியுள்ளது. அதன்படி இம்முறையும் கட்சிகளுக்கு டீ கப், செருப்பு, சாப்பாத்தி கட்டை, எரிவாயு அடுப்பு, போன் சார்ஜர் உள்ளிட்டவைகளை ஒதுக்கியுள்ளது.
அதன்படி 27 அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கியுள்ளது. அதில் 12 கட்சிகள் உத்திரப்பிரதேசத்தில் போட்டியிடவுள்ளன. குறிப்பாக உத்திரப்பிரதேசத்தில் 80 தொகுதிகளிலும் போட்டியிடும் ராஸ்டிரீயா ஜன்சக்தி கட்சிக்கு ‘ஸ்டூல்’ சின்னம் கிடைத்துள்ளது.
அதேபோல தமிழ்நாட்டில் போட்டியிடவுள்ள அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் மற்றும் அகில இந்திய மக்கள் நல்வாழ்வு கட்சி ஆகிய கட்சிகளுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் என்ற கட்சிக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அகில இந்திய மக்கள் நல்வாழ்வு கட்சிக்கு பாட்டில் சின்னத்தை ஆணையம் ஒதுக்கியுள்ளது.
இருப்பினும் இந்தக் கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடவில்லையோ அந்த இடங்களில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் பொது பட்டியலில்தான் இருக்கும். அத்துடன் இக்கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் விதிகளிலுள்ள எண்ணிக்கைக்கு குறைவாக வேட்பாளர்களை நிறுத்தினால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் திரும்ப பெறப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Loading More post
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து: 12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
நாமக்கல்: 10 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு: பெண் சிசு கொலையா? போலீசார் விசாரணை
"தமிழகத்தில் கொரோனா ஏறுமுகம்; மக்கள் ஒத்துழைப்பு தேவை"-சுகாதாரத்துறை செயலாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!