அமித் ஷா இன்று தமிழகம் வருகை : மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மக்களவைத் தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார். 


Advertisement

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று ராமநாதபுரம் வருகை நாடாளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த வருகை தருகிறார். தனி விமானம் மூலம் காலை 10.15 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வரும் அவர், அதன் பின்னர் அருப்புக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கல்லூரியில் நடைபெறும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். இக்கூட்டம் காலை 10.25 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறவுள்ளது. 


Advertisement

இதில் மதுரை, விருதுநகர், தேனி உள்ளிட்ட 18 மக்களவைத் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் அவர், தேர்தல் களப்பணிகள், வியூகம் குறித்து எடுத்துரைக்கவுள்ளார். பின்னர் அங்கிருந்து 11.35 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக 12.30 மணிக்கு ராமநாதபுரம் செல்கிறார். அங்கு பட்டணம் காத்தான் பகுதியில், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, நாகை ஆகிய 4 மக்களவைத் தொகுதிகளுக்கான பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். அமித்ஷா பங்கேற்கும் கூட்டத்துக்கு மேடை அமைக்கும் பணி ராமநாதபுரம்-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. அதை பணிகளை பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில துணைத்தலைவர் அரசகுமார் மற்றும் நிர்வாகிகள் பார்வையிட்டனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement