தோனி 5வது இடத்தில் விளையாட வேண்டும் - விவிஎஸ் லஷ்மண் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

2019 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை வெல்ல வாய்ப்புள்ள அணிகள் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மண் கருத்து தெரிவித்துள்ளார். 


Advertisement

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய லஷ்மண், “ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை உலகக் கோப்பை தொடர் தான் மிகப்பெரியது. கடந்த ஒரு ஆண்டாக பார்க்கும்போது இந்திய அணியின் செயல்பாடு மிகவும் சிறப்பாக உள்ளது. ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வெல்வது உண்மையில் சவாலான விஷயம்தான். தற்போது இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் அற்புதமாக உள்ளது. எதிரணியை குறைவான ரன்களில் கட்டுப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

           


Advertisement

சரியான நேரத்தில் இந்திய அணி உச்சத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது, இந்திய அணி உலகக் கோப்பை வெல்லும் தகுதியுடன் உள்ளது என்பதை காட்டுகிறது. ஒருநாள் போட்டிகளைப் போல் டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி சிறப்பாக செயல்படுகிறது. 

         

தோனி 5வது இடத்தில் விளையாட வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. அவரால் ஆட்டத்தை திறமையாக முடிக்க முடியும். அவருக்குப் பின்னால், ஹர்திக் பாண்ட்யா, கேதர் ஜாதவ் உள்ளிட்டோர் வலுவாக இருப்பார்கள். சமீபகாலமாக அம்பத்தி ராயுடு சிறப்பாக விளையாடி வருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் அடித்த 90 ரன்கள், அவரது 4வது இடத்தை உறுதி செய்துள்ளது. உலகக் கோப்பையை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கே வாய்ப்புள்ளது” என்றார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement