[X] Close

“கூட்டணிக்குள் எந்தக் குழப்பமும் இல்லை” - கனிமொழி பேட்டி

Subscribe
MP-Kanimozhi-said-no-issue-in-DMK-Alliances

திமுக கூட்டணிக்குள் எந்தக் குழப்பமும் இல்லையென்றும், அதிமுக கூட்டணிக்குள்தான் குழப்பம் உள்ளதாகவும் திமுக எம்.பி கனிமொழி விமர்சித்துள்ளார்.


Advertisement

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களில் ஒருவரான தூத்துக்குடி சுப்ரமணியனின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற எம்.பி கனிமொழி இன்று சவலப்பேரி வந்தார். அத்துடன் திருச்செர்ந்தூரில் நடைபெறும் திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் அவர் வருகை தந்திருந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக ஆட்சியை அதிகமாக விமர்சித்ததும், கேடுகெட்ட ஆட்சி என்று கூறியதும் அன்புமணி ராமதாஸ்தான். அப்படி விமர்சித்து வந்த அவரே தற்போது கூட்டணி சேர்ந்துள்ளார். இதைபற்றி அவர்தான் கூற வேண்டும். 

காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து ஸ்டாலின் அறிவிப்பார். மேலும், மற்ற கட்சிகளுடனான கூட்டணி குறித்தும் விரைவில் அவர் அறிவிக்கவுள்ளார். எங்கள் கூட்டணிக்குள் எந்தக் குழப்பமும் இல்லை. அவர்களுக்குள் (அதிமுக)தான் குழப்பம் உள்ளது. எத்தனை பேரை சேர்க்க முடியுமோ, அத்தனை பேரை சேர்த்து வெற்றி பெற்றுவிடலாம் என்ற தவறான எண்ணத்தில் அதிமுக-பாஜக உள்ளனர்” என்று கூறினார். 


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close