கடையச் சாத்தீட்டிங்க... நாங்க எங்க போறது? மதுப்பிரியர்கள் போராட்டம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பல்வேறு இடங்களில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் வடவல்லநாடு பகுதியைச் சேர்ந்த சிலர் தங்களது பகுதியில் டாஸ்மாக் கடையை‌ அமைக்க வேண்டுமெனக்கோரி ஆர்‌ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.


Advertisement

குடியிருக்கும் பகுதிகளில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதைக் கண்டித்து கடையை திறக்கவிடாமல் முற்றுகையிட்டு பொதுமக்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மதுக்கடை மூடப்பட்டதால் கடும் மன அழுத்தம் ஏற்பட்டிருப்பதாகவும், மது வாங்குவதற்காக நெல்லைக்கு சென்று வருவதால், பேருந்தில் சாதி மோதல்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். வடவல்லநாடு காட்டுப்பகுதியில‌ டாஸ்மாக் கடையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி முழக்கமிட்டனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement