மத்திய அரசுக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மேற்கு வங்க முதலைச்சர் மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்து கனிமொழி எம்.பி. ஆதரவு தெரிவிக்க இருக்கிறார்.
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க, அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று சென்றனர். அவர்களை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. சிபிஐ அதிகாரிகளை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் மத்திய அரசு, கூட்டாட்சி அமைப்பை சிதைக்கப் பார்க்கிறது என்றும் கூறி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது. தர்ணா போராட்டம் இன்றும் தொடர்கிறது.
மம்தா பானர்ஜியின் போராட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. திமுக சார்பில் கனி மொழி எம்.பி, ’’மாநில உரிமைகளை காக்க, அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க, மம்தா பானர்ஜியின் போராட்டத்தை ஆதரிப்பது நம் கடமை’’ என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், மேற்கு வங்கத்துக்கு நாளை செல்லும் கனிமொழி எம்.பி, மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்து ஆதரவு தெரி விக்கிறார்.
Loading More post
தமிழகத்தில் இன்று முதல் தடுப்பூசி திருவிழா தொடக்கம்!
பெரிய அளவில் முழு ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பில்லை - நிர்மலா சீதாராமன்
மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து: மத்திய அரசு
ட்விட்டரில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!