ரஜினி மகள் சௌந்தர்யாவுக்கு பிப்.11ல் திருமணம்?

Rajinikanths-Daughter-Soundarya-May-Marry-Vishagan-Vanangamudi-In-February

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கு பிப்ரவரி 11ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Advertisement

கிராஃபிக்ஸ் டிசைனரான சௌந்தர்யா‘சந்திரமுகி’,‘சிவாஜி’,‘கோச்சடையான்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். தனுஷ் நடிப்பில் அவர் இயக்கிய ‘வேலையில்லா பட்டதாரி2  2017ல் வெளியானது. சௌந்தர்யா தனது முதல் கணவர் அஸ்வினுடன் இருந்து சட்டப்படி பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு மூன்று வயதில் மகன் இருக்கிறார். இதனையடுத்து, தொழிலபதிர் விசாகன் வணங்காமுடி என்பவருடன் சௌந்தர்யாவுக்கு இரண்டாவது திருமணம் நடைபெறவுள்ளதாக கடந்த நவம்பர் மாதம் செய்திகள் வெளியாகி இருந்தன. 

             


Advertisement

இந்நிலையில், சௌந்தர்யாவுக்கும், விசாகன் வணங்காமுடிக்கும் பிப்ரவரி 11ம் தேதி சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்தையொட்டி பிப்ரவரி 9ம் தேதி முதல் மெஹந்தி வைத்தல், வரவேற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது. திருமணத்திற்காக சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் பூஜைகள் நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

                 

சென்னையில் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை விசாகன் நடத்தி வருகிறார். அதோடு, ‘வஞ்சகர் உலகம்’ படத்திலும் அவர் நடித்துள்ளார். மேலும் விசாகனுக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement