“ஷங்கர் என்னை நிச்சயம் அழைப்பார்” -‘இந்தியன் 2’பற்றி விவேக்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கமல்ஹாசனின்‘இந்தியன் 2’ படத்தில் என் கதாப்பாத்திரம் தேவைப்பட்டால் இயக்குநர் ஷங்கர் நிச்சயம் என்னை அழைப்பார் என நடிகர் விவேக் விளக்கம் தெரிவித்துள்ளார்.


Advertisement

1996 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கிய படம் ‘இந்தியன்’. இதன் முதல் பாகம் முடிவில் 80 வயது முதியவராக வரும் கமல்ஹாசன் விபத்தில் சிக்கி மாயமாவது போன்றும், வெளிநாட்டில் இருந்து அவர் போன் செய்வது போன்றும் முடித்து இருந்தனர். 


Advertisement

இதன் வெற்றியை தொடர்ந்து ‘2.0’ தயாரிப்பு நிறுவனமான ‘லைக்கா புரொடக்ஸன்ஸ்’ ‘இந்தியன்2’ படத்தை தயாரிப்பதாக அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து ‘இந்தியன்2’ படத்திற்கான செட் அமைக்கும் பணி கடந்த நவம்பர் 12 ஆம் தேதி தொடங்கப்பட்டது. ‘இந்தியன் 2’ படத்தில் பிரபல நடிகை காஜல் அகர்வால் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதற்காக காஜல் அகர்வால் களரி பயிற்சி கற்று வருகிறார். ‘இந்தியன் 2’படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 


Advertisement

‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த 18 ஆம் தேதி பொள்ளாச்சியில் தொடங்கியது. அப்போது இந்தியன் தாத்தா வேடத்தில் கமல்ஹாசன் பூஜையில் பங்கேற்றார். 

இப்படத்தில் கமல்ஹாசனுடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் நடிக்கிறார். மேலும் சித்தார்த் மற்றும் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதனிடையே இந்தப் படத்தில் காமெடி நடிகர் விவேக் நடிக்க உள்ளதாக பல்வேறு தரப்பில் இருந்து தகவல்கள் பரப்பப்பட்டன. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் விளக்கம் தெரிவித்துள்ளார். அதில், “நான் பள்ளி பருவத்திலிருந்தே கமல்ஹாசனின் தீவிர ரசிகன். அது அபூர்வராகங்கள் வெளியான நேரம். அவருடன் சேர்ந்து பணியாற்றினாலும், பணியாற்றாவிட்டாலும் தற்போது வரை நான் அவருடைய ரசிகன் தான். ‘இந்தியன் 2’ கதைக்கு நான் தேவைப்பாட்டால் இயக்குநர் ஷங்கர் நிச்சயம் என்னை அழைப்பார். அதுவரை வதந்திகளை பரப்ப
வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கிய பாய்ஸ், அந்நியன், சிவாஜி உள்ளிட்ட படங்களில் ஏற்கனவே விவேக் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement