மயானத்திலும் வைஃபை வசதி

Wifi-facility-in-Burial-ground

நவீன தொழில்நுட்பங்களின் வீச்சு தற்போது மனிதனின் கடைசி போக்கிடமான மயான பூமி வரை சென்றுவிட்டது. ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் மட்டுமே இருந்த வைஃபை வசதி மயானங்களுக்கும் வந்துவிட்டது.


Advertisement

சென்னை மாநகராட்சிக்குட்பட்டது வேலங்காடு பகுதியில் உள்ள மயான பூமி. இங்கு மொபைல் ஃபோன் கோபுர சிக்னல்கள் பலவீனமாக இருப்பதால் ஃபோன்களை பயன்படுத்த இயலாத நிலை உள்ளது. இந்நிலையில் இங்கு வருபவர்கள் தங்கள் அன்பிற்குரியவர்களின் இறுதிக்காட்சிகளை ஃபேஸ்புக் உள்ளிட்ட வசதிகள் மூலம் வெளியுலகுக்கு தெரியப்படுத்த இயலாத கஷ்ட நிலையில் உள்ளனர். ஆனால் ஒரு சில நாட்களில் இந்நிலை மாற உள்ளது.

இந்திய சமுதாய நல நலவாழ்வு நிலையம் என்ற அமைப்பு ரோட்டரி கிளப்புடன் இணைந்து மயான பூமிக்கு இலவச வைஃபை வசதியை கொண்டு வர உள்ளது. குக்கிராமம் போல் இருந்த உலகம் இன்று பரந்து விரிந்து விட்டதால் உறவுகளும் நட்புகளும் பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் வசிக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. இது போன்ற நிலையில் மயான பூமியிலும் வழங்கப்பெறும் வைஃபை வசதி ஒரு வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement