தண்ணீர் விநியோகத்தை பாதியாக குறைக்கவுள்ள சென்னை குடிநீர் வாரியம் !

Chennai-Metro-Water-Officials-decide-to-Supply-60-litres-less-water-a-day-per-person

சென்னை மக்களுக்கு வழங்கப்படும் தண்ணீரை பாதியாக குறைக்க சென்னை குடிநீர் வாரிய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


Advertisement

சென்னை தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகள் மற்றும் நீர்நிலைகளின் தண்ணீர் அளவு குறைந்துவிட்டதால், மக்களுக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவை பாதியாக குறைக்க மெட்ரோ வாட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நாள் ஒன்றுக்கு சென்னையின் சராசரி தண்ணீர் தேவை 830 மில்லியன் லிட்டர் ஆகும். இந்த அளவின் படி தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டால் தினந்தோறும் ஒரு வீட்டிற்கு 140 லிட்டர் தண்ணீர் வழங்கப்படும். ஆனால் நீர்நிலைகளின் தண்ணீர் குறைவை கணக்கில் கொண்டு, கடந்த டிசம்பர் மாதம் மக்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் அளவு 830 மில்லியன் லிட்டரிலிருந்து 650 மில்லியன் லிட்டராக குறைக்கப்பட்டது.

Image result for chennai metro water


Advertisement

தற்போது நீர்நிலைகளின் தண்ணீர் அளவு மேலும் குறைந்துள்ளதால், தற்போது வழங்கப்படும் தண்ணீரையும் நாள் ஒன்றுக்கு 450 லிட்டராக குறைக்க மெட்ரோ நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. இந்த அளவின்படி கணக்கீட்டால், நாள் ஒன்றுக்கு ஒருநபர் 60 லிட்டருக்கும் குறைவான தண்ணீரையே பயன்படுத்த முடியும். சென்னையின் தண்ணீர் தேவைக்காக தற்போது, நெம்மேலி மற்றும் மீஞ்சூரில் உள்ள கடல்நீர் குடிநீர் திட்ட நிலையங்களிலிருந்து 100 மில்லியன் லிட்டர் நாள் ஒன்றுக்கு பெறப்படுகிறது. வீராணம் ஏரியிலிருந்து 180 மில்லியன் லிட்டர் கிடைக்கிறது. 

Related image

இதுதவிர விவசாய கிணறுகள் மற்றும் மெட்ரோ நிர்வாகம் கட்டுப்பாடுகளில் உள்ள கிணறுகளில் இருந்து 60 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இந்த அளவு கோடைக் காலத்தில் 100 மில்லியனாக உயரும். இதுதவிர மாங்காடு அருகே உள்ள சிக்கராயபுரம் உள்ளிட்ட குவாரிகளிலிருந்து 30 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது. செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் உள்ளிட்ட ஏரிகள் மற்றும் நீர்நிலைகளிலிருந்து மற்ற நீர் கிடைக்கிறது. இதில் செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகியவற்றின் நீர் அளவு மிகக் குறைவாகவே உள்ளது. இதனால் இந்த ஆண்டு கோடைக்காலத்தில் மேலும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும்.


Advertisement

Image result for chennai metro water

இதனை கட்டுப்படுத்தும் வகையில் மெட்ரோ வாட்டார் நிர்வாகம் மக்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் அளவை குறைக்கிறது. அத்துடன் குடிநீர் நிலையங்களில் மறுசுழற்சி செய்யப்படும் தண்ணீரை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது மறுசுழற்சி மூலம் சுத்திரிப்பு செய்யப்படும் தண்ணீர் புழல் நீர் வடிகால் கால்வாய்களில் கொட்டப்படுகிறது. 10 மில்லியன் லிட்டர் அளவீடு கொண்ட கோயம்பேடு, நெசப்பாக்கம், பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் ஆகிய இடங்களில் உள்ள குடிநீர் நிலையங்களை இயக்கவும் டெண்டர் அறிவிக்கப்படவுள்ளது. மேலும், தொழிற்பேட்டைகளில் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மற்றும் வணிகக் கடைகளுக்கு வழங்கப்படும் தண்ணீரை 40% குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement