[X] Close

வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது தங்‌கத்தின் விலை

Subscribe
Gold-prices-today-rise-to-7-year-high

தங்‌கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டில் அதிகபட்ச விலைக்கு விற்பனையான தங்கம் தற்போது அந்த உச்சத்தையும் கடந்துள்ளது.


Advertisement

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 25 ரூபாய் விலை அதிகரித்து 3,076 ரூபாய்க்கும், ஒரு சவரன் 200 ரூபாய் விலை ஏற்றம் கண்டு 24,582 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Advertisement

கடந்த 2012-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமின் விலை 3,068 ரூபாயாக இருந்தது. இதுவே கடந்த 7 ஆண்டுகளில் தங்கம் கண்ட அதிகபட்ச விலையாக இருந்து வந்தது. பின்னர் அதன் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், 2016-ஆம் ஆண்டு ஜனவரியில் அது 2,402 ஆக சரிந்தது. இதுவே கடந்த 7 ஆண்டுகளில் தங்கத்தின் குறைந்த பட்ச விலையாகும். இடைப்பட்ட 4 ஆண்டுகளில் தங்கம் விலை கிராமுக்கு 666‌ ரூபாய் குறைந்திருந்தது.

ஆனால் இதன் பின் தங்கம் விலை சில இறக்கங்களை தவிர்த்து பெரும்பாலும் ஏறுமுகமாகவே இருந்தது. இந்நிலையில் தற்போது அதன் விலை முன் எப்போதும் இல்லாதவகையில் கிராமுக்கு 3,076 ரூபாயை எட்டியுள்ளது. அதாவது கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு 673 ரூபாய் அதிகரித்துள்ளது.


Advertisement

நாடு முழுவதும் திருமண சீசன் தொடங்கவுள்ள நிலையில் தங்கத்தின் தேவை வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் அதன் விலை கடுமையாக அதிகரிக்க இதுவே முக்கிய காரணம் என்றும் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது தவிர சர்வதேச சந்தை சூழல்களும் தங்கத்தின் விலை உயர மற்றொரு காரணம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close