கன்னியாகுமரியில் வர்த்தக துறைமுகம் அமைவது உறுதி: பொன்.ராதாகிருஷ்ணன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கன்னியாகுமரி மாவட்டத்தில் வர்த்தக துறைமுகம் அமைக்கப்படும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


Advertisement

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நாகர்கோவிலில் 114 கோடி ரூபாய் மதிப்பில் "Y" வடிவிலான மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பாலம், 54 தூண்களின் மேல் கட்டப்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே முதல் முறையாக மேம்பாலத்தில் பேருந்து நிறுத்த வசதியுடன் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலத்தின் 90 சதவிகித பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டது. இதனை ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டு மகிழ்ச்சியடைந்தனர். 


Advertisement

இதேபோல் மார்த்தாண்டத்தில் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்தில் கட்டப்பட்டுவரும் மேம்பாலத்திலும் 90 சதவிகித பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த இரண்டு பாலங்களிலும் வரும் 19ம் தேதி முதல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

மேலும் கூறிய அவர் மீதமுள்ள கட்டுமானபணிகள் முடிவடைந்த பின்னர் விரைவில் திறப்பு விழா நடத்தப்படும் எனவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வர்த்தக துறைமுகம் அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement