டிச.17ல் ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்கிறார் கெலாட் - ராகுல் பங்கேற்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக டிசம்பர் 17ஆம் தேதி அசோக் கெலாட் பதவியேற்கிறார்.


Advertisement

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக ஆட்சி செய்த மாநிலங்களான ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும்
மத்தியப் பிரதேசம் ஆகிய இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதில் மத்தியப் பிரதேச முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்க,
போபாலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இந்த ஆலோசனைக்குப் பின் மூத்த தலைவர் கமல்நாத்தை முதல்வராக காங்கிரஸ் அறிவித்தது. இதைத்தொடர்ந்து ராஜஸ்தான்
மாநிலத்திலும், சத்தீஸ்கரிலும் யார் முதலமைச்சர் என்பது தொடர்பாக காங்கிரஸ் ஆலோசித்து வந்தது. குறிப்பாக ராஜஸ்தானில்
அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் இருந்தன. இதனையடுத்து, அசோக் கெலாட்டை முதலமைச்சராக காங்கிரஸ் கட்சி தேர்வு செய்தது. துணை முதல்வராக சச்சின் பைலட்டை தேர்வு செய்தது.


Advertisement

         

இந்நிலையில், ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் கல்யான் சிங்கிடம் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள சச்சின் பைலட் இருவரும் கடிதம் கொடுத்தனர். ஜெய்ப்பூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் சச்சின் பைலட் உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்தனர். 

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அசோக் கெலாட், “பொதுமக்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறோம். முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்குமான பதவியேற்பு நிகழ்ச்சி டிசம்பர் 17ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். பின்னர், அமைச்சரை உருவாக்கப்படும்” என்று கூறினார். 


Advertisement

இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில், மத்திய பிரதேச, ராஜஸ்தான் முதலமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

             

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு முதல்வர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்திற்கு மட்டும் இன்னும் முதல்வர் யார் என்று அறிவிக்கப்படவில்லை. சத்தீஸ்கர் முதல்வர் யார் என்பதை நாளை காங்கிரஸ் தெரிவிக்கும் என்று கூறப்படுகிறது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement