“சொன்னபடி ராமர் கோயிலை கட்டுங்கள்” பாஜகவுக்கு ஆர்.எஸ்.எஸ் வேண்டுகோள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வாக்குறுதி அளித்தபடி அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என பாரதிய ஜனதா அரசுக்கு ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஷ்வ இந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.


Advertisement

ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி விஷ்வ இந்து அமைப்பு சார்பில் டெல்லியில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. அப்போது பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி, ராமர் கோயில் கட்ட சட்டம் இயற்றுவதே நிரந்தர தீர்வாக இருக்கும் என்று கூறினார். பாரதிய ஜனதா அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று அவர் தெரிவித்தார். 

   


Advertisement

கூட்டத்தில் பேசிய விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் விஷ்ணு சதாஷிவ் கோக்ஜே, ஜனநாயக நாட்டில் நீதிமன்றத்தைக் காட்டிலும் மக்கள் தான் தலைவர்கள் என்று கூறினார். பேரணியின் போது கோயில் கட்டப்படும் வரை பிரதமர் நரேந்திர மோடியை ஓய்வெடுக்க விடமாட்டோம் என ஹரித்துவாரைச் சேர்ந்த சுவாமி ஹன்ஸ்தேவாச்சர்யாவும் பேசினார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement