[X] Close

18 மாடி கட்டிடத்தில் தீவிபத்து - ஒருவர் உயிரிழப்பு; 19 பேர் படுகாயம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மும்பையில் 18 மாடி கட்டிடத்தின் மூன்றாவது மாடி தீப்பிடித்ததில் 70 வயது மதிக்கத்தக்க வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 19 பேர் படுகாயமடைந்தனர். 


Advertisement

மும்பையில் மகாலட்சுமி ரேஸ் கோர்ஸ் அருகே 18 மாடி சாம்ராட் அசோகா கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இன்று அதிகாலை தீப்பிடித்தது. முதலில் மின் ஒயரில் தீ பிடித்து பின்னர் அது மற்ற இடங்களுக்கு பரவியது எனவும் தீ மற்றும் புகை காரணமாக மாடிகளில் குறைந்தது 96 குடியிருப்பாளர்கள் தவித்து வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 


Advertisement

மேலும் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் உதவியோடு 50 பேர் பாதுகாப்பாக மேல் மாடியிலிருந்து தரையிறக்கப்பட்டதாகவும் நான்கு பேர் சிறப்பு சாதனங்களை பயன்படுத்தி காப்பாற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டனர்.

மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இதில் லட்சுமி பாய் கோலி என்ற வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் 77 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் 19 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement