“போராட்டத்தை கைவிடுங்கள்” - ஜாக்டோ - ஜியோவினருக்கு முதல்வர் வேண்டுகோள்

tamilnadu-cm-edappadi-palanisamy-requested-with-jacto-geo-members-to-withdraw-their-indefinite-protest

ஜாக்டோ - ஜியோவினர் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Advertisement

புதிய ஓய்வுதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி டிசம்பர் நான்காம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்து இருந்தனர். பின்னர், தமிழக அரசு ஜாக்டோ ஜியோ அமைப்பினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

சென்னையில், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில்‌ உடன்பாடு எதுவும்  எட்டப்படவில்லை. இந்நிலையில், இன்று திருவல்லிக்கேணியில் ஜக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திட்டமிட்டபடி வரும் 4ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.


Advertisement

            

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாயவன், அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் திருப்தி இல்லை என கூறினார். மேலும் அவர் கூறுகையில், “7அம்சகோரிக்கைகள் குறித்து 20 ஒருங்கிணைப்பாளர்கள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் எடுத்து கூறினோம். ஜெயக்குமார் எங்கள் கோரிக்கையை முதல்வர் கவனத்துக்கு எடுத்துசெல்வதாக அலட்சியமாக கூறினார். ஜெயலலிதா நினைவு நாளான டிசம்பர் 5ம் தேதி அவரது படத்தை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். 

புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் வேலைநிறுத்தம் நடைபெறும். டிசம்பர் 6ம் தேதிக்குள் முதல்வரே எங்களை அழைத்து பேசினால் ஸ்டிரைக்கை கைவிடுவது பற்றி பரிசீலனை. பேச்சு நடத்தாவிடில் டிசம்பர் 7 முதல் போராட்டம் தீவிரமடையும்” என்றார்.


Advertisement

         

இந்நிலையில், ஜாக்டோ - ஜியோவினர் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்ட அறிவிப்பு புயல் பாதிப்பு பகுதிகளில் சீரமைப்பு பணியை பாதிக்கும் என்று முதல்வர் கூறியுள்ளார். தற்போது கஜா புயலினால் தமிழகத்தில் மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பனிகளில் தமிழக அரசு ஈடுப்பட்டு வருவதால் அரசு அதிகாரிகள் தக்க ஒத்துழைப்பைத் தர வேண்டும் என்றும், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளில் செயல்படுத்த வாய்ப்புள்ள கோரிக்கைகளை தமிழக அரசு முறையாக செயல்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement