“மோசமான ஆட்டம் திருமண நாள் விழாவை பாதிக்கவில்லை” - யுவராஜ் சிங்

Yuvaraj-Singh-reveals-how-he-made-it-to-2-years-with-wife

ரஞ்சி கோப்பையின் மோசமான ஆட்டம் தனது 2-ஆம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்டத்தை கெடுக்கவில்லை என கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.


Advertisement

2018-19 ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் நவம்பர் 1-ஆம் தேதி முதல் தொடங்கி  நடைபெற்று வருகிறது. இதில் பஞ்சாப்- மற்றும் டெல்லி அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணிக்காக ஆடிய யுவராஜ் சிங் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதாவது மொத்தமாக 28 பந்துகளை எதிர்கொண்ட பின்புதான் முதல் ரன்னையே எடுத்தார். தொடர்ந்து சமாளித்து ஆடிய யுவராஜ் சிங் எப்படியோ 24 ரன்களை குவித்தார். யுவராஜ் சிங்கின் ஆட்டம் குறித்து விமர்சனமும் எழுந்தது.


Advertisement

இந்நிலையில் யுவராஜ் சிங் தனது இரண்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளார். இதுகுறித்து தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், தனது மனைவியான ஹேசல் கீச்சிற்கு திருமண நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அத்துடன் வாழ்க்கையின் நல்லது, கெட்டது உள்ளிட்ட அனைத்து காலகட்டத்திலும் மனைவி துணை நிற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள யுவராஜ் சிங், டெல்லி அணியுடனான மோசமான ஆட்டம் தனது இரண்டாம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்டத்தை பாதிக்கவில்லை என கூறியுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிகம் பிடித்த ஐபிஎல் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறுவது உண்டு. இதில் பங்கேற்கும் அணிகள், தங்களது அணிக்காக ஆடிய ஒருசில வீரர்களை தங்களது அடுத்த போட்டிக்காக தக்க வைத்துக்கொள்ளலாம். அப்படி தக்கவைக்கப்படாத வீரர்கள் ஏலத்திற்கு வருவார்கள். அவர்களை மற்ற அணி நிர்வாகம் தேர்வு செய்யலாம். தேர்வு செய்யாமலும் விடலாம்.


Advertisement

ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக கடந்த முறை ஆடிய யுவராஜ் சிங்சை அந்த அணி தற்போது தக்க வைக்காமல் விலக்கிக் கொண்டுள்ளது. அதேசமயம் கேஎல் ராகுல், கருண் நாயர், ரவிச்சந்திர அஸ்வின் ஆகிய வீரர்களை பஞ்சாப் அணி வரும் ஐபிஎல் போட்டிக்காக தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement