[X] Close >

வரதட்சணைக் கேட்டு மனைவியை அடித்து கொன்றதாக புகார்? 

Complain-about-dowry-murder

சென்னை காசிமேட்டில் வரதட்சணைக் கேட்டு மனைவியை அடித்து கொன்று தூக்கிலிட்டதாக கணவன் மீது பெண்ணின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 


Advertisement

சென்னை காசிமேடு ஜீவரத்தினம் நகரை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவருக்கும் ஜெயஸ்ரீ என்ற பெண்ணுக்கும் 2 வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான சில நாட்களிலேயே கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்த வண்ணம் இருந்துள்ளது. அதற்கு பார்த்தசாரதி ஜெயஸ்ரீயை வரதட்சணைக் கேட்டு கொடுமை படுத்தியதே காரணம் என கூறப்படுகிறது. 

இந்நிலையில் ஜெயஸ்ரீ தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெண்ணின் தந்தையிடம் பார்த்த சாரதி கூறியுள்ளார். ஆனால் பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. 


Advertisement

இதையடுத்து கூடுதல் வரதட்சணைக் கேட்டு மனைவியை அடித்து கொன்று தூக்கிலிட்டதாக கணவன் மீது பெண்ணின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.  
 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close