விஜய்யின் 63வது படத்தை அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் ‘சர்கார்’. கதை திருட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை தாண்டி தீபாவளியன்று வெளியாகி இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சர்காரை தொடர்ந்து விஜயின் அடுத்தப்படத்தை அட்லி இயக்குவார் என்று ஏற்கெனவே செய்திகள் வெளியாகி இருந்தன. விஜய்யை வைத்து அட்லி கூட்டணியில் உருவான ‘தெறி’,‘மெர்சல்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் வணிக ரீதியில் வெற்றிப் பெற்றன.
இந்நிலையில், தளபதி விஜய்யின் 63 வது படத்தை அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் நிறுவனத்தின் 20வது திரைப்படத்தின் மூலம் விஜய்யுடன் இணைவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும், இது எங்களின் நீண்ட நாள் கனவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘தளபதி63’ திரைப்படத்தின் இயக்குநர் அட்லி எனவும் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய், இயக்குநர் அட்லி, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் ‘தளபதி63’ இவர்களின் 2 வது திரைப்படமாக அமைந்துள்ளது.
மிக பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகும் ‘தளபதி63’ ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை கண்டிப்பாக பூர்த்தி செய்யும் எனவும் இதுவரை விஜய் நடித்த படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக இப்படம் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading More post
டெல்லி போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு
டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் புகைப்படத் தொகுப்பு
பதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு!
கதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ!
"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி