தீபாவளி பண்டிகையில் நாய்களை வழிபடும் நேபாள மக்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தீபாவளி பண்டிகையை நாய்களின் பூஜை நாளாக நேபாள மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.


Advertisement

நம்ம ஊரில் மாட்டுப் பொங்கல் கொண்டாடுவதை போல நேபாளத்தில் நாய்களை வைத்து தீபாவளிக் கொண்டாடி வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் நேபாள மக்கள் மொத்தம் ஐந்து நாட்களை தீபாவளி பண்டிகையாக கடைபிடித்து வருகிறார்கள். அதாவது இந்து முறைப்படி தீபாவளிக்கு 5 நாட்கள் முன்பே தீபாவளியைக் கொண்டாத் தொடங்கி விடுகின்றனர். அதில் சரியாக இரண்டாம் நாள் அன்று நாய்களுக்கு நன்றி செலுத்தும் விழாவாக அம்மக்கள் கடைபிடித்து வருகிறார்கள். அந்நாளில் நாய்களை குளிக்க வைத்து அதற்கு சந்தனம் தடவி, நெற்றியில் பொட்டு, திலகம் வைத்து கழுத்தில் மாலை அணிவித்து முறைப்படி பூஜை செய்கிறார்கள். 

அதாவது நேபாளிகளின் மத நம்பிக்கைப்படி நாய்கள், யமதர்ம ராஜாவின் தூதுவராகக் கருதப்படுகின்றன. அவை தங்களை பற்றிய செய்தியை கடவுளிடம் கொண்டு சேர்க்கும் ஒரு செய்தியாளராக இருப்பதாகவும் ஆகவே அதனை வழிப்பட்டால் மரணத்திற்குப் பிறகு கடவுள் நல்ல வாழ்க்கையை அமைத்து தருவார் என்றும் மக்கள் நம்புகிறார்கள்.


Advertisement

இப்பண்டிகையை அம்மக்கள் ‘குகுர் டிஹர்’ என்று பெயரிட்டு அழைத்து வருகிறார்கள். இந்த விழா சகல தரப்பினராலும் கொண்டாடப்படுகிறது. காவல்துறையில் உள்ள நாய்களுக்குகூட இதே போன்ற ராஜ மரியாதைகள் வழங்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகின்றன. 

மேலும் இந்தப் பண்டிகை மனிதர்களுக்கும் நாய்களுக்குமான உறவை அதிகப்படுத்துவதாக நம்பப்பட்டு வருகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement