தமி்ழ்நாட்டில் முதன்முறையாக டிஜிட்டல் நூலகம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சேலத்தில் முதன்முறையாக டிஜிட்டல் நூலகத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.


Advertisement

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலமாக, தமிழகத்தில் முதன்முறையாக டிஜிட்டல் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள கிளை நூலகத்தில் திறக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் நூலகத்தை மாவட்ட ஆட்சியர் ரோகிணி இன்று தொடங்கி வைத்தார். இதனால் ஏழை கிராமப்புற மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் தங்களுக்கான படிப்பு மற்றும் தொழில் சம்பந்தமான சந்தேகங்களை அறிந்துகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

அத்துடன் அரசியல் கலை இலக்கியங்கள் குறித்த சந்தேகங்களையும் தெளிவுபடுத்திக் கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. இந்த டிஜிட்டல் நூலகத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமப் புறங்களில் உள்ள நூலகத்திற்கும் விரிவுபடுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நூலகத்தை திறந்து வைத்த பின்னர், எடப்பாடியில் உள்ள அம்மா உணவகம் மற்றும் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் டெங்கு கொசு உற்பத்தி குறித்து ஆட்சியர் ரோகிணி ஆய்வு மேற்கொண்டார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement